ஜப்பான் மற்றும் பிரான்சிலும் உருமாறிய கொரொனா வைரஸ் பரவல்..!

பிரிட்டனில் பரவிவரும் உருமாறிய கொரோனா ஜப்பான் மற்றும் பிரான்சிலும் பரவியுள்ளது உறுதியாகியுள்ளது. பிரிட்டனில் இருந்து சமீபத்தில் ஜப்பானுக்குச் சென்ற ஐந்து பேருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

எனவே அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறியும் பணி நடைபெற்று வருவதாகவும் ஜப்பான் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 

அதேபோல லண்டனில் இருந்து கடந்த 19ஆம் தேதி பிரான்சுக்கும் சென்ற ஒருவரும் உருமாறிய கொரொனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டவருக்கு அறிகுறி இல்லை என்றும் அவர் தனக்குத்தானே தனிமைப்படுத்திக்கொண்டு வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதில் ஜப்பான், பிரான்ஸ் ஆகிய இரு நாடுகளுமே பிரிட்டனில் இருந்து பயணிகள் வருவதற்கு தடை விதித்துள்ளன.


Leave a Reply