கோவை : கவுண்டம்பாளையம் பகுதியில் குடிநீர் சப்ளை கட்.பொதுமக்கள் பாடு திண்டாட்டம் !!!

கோவை கவுண்டம்பாளையம், வடவள்ளி ஆகிய பகுதிகளில் குடிநீர் குழாய் இணைப்பு பணிகள் காரணமாக நாளை முதல் நான்கு நாட்களுக்கு குடிநீர் சப்ளை நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கோவை மாநகராட்சி சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட கவுண்டம்பாளையம் மற்றும் வடவள்ளி ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் குடிநீர் குழாய் இணைப்பு பணி நடைபெற உள்ளது.

 

எனவே,வரும் 27ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரையிலான நான்கு நாட்களுக்கு வார்டு எண் 5 முதல் 9 வரையிலும்,வார்டு எண் 16 முதல் 19 வரையிலும் உள்ள வார்டுகளுக்கு பவானி குடிநீர் விநியோகம் செய்ய இயலாது என மாநகராட்சி நிர்வாகம் மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் போதுமான குடிநீர் கிடைக்காமல் பொது மக்கள் திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.


Leave a Reply