--- --:--:-- --

காதலித்துவிட்டு வேறொரு ஆண் நபருடன் நெருங்கி பழகியதால் காதலியை கொலை செய்த காதலன்..!

5

ந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் எஸ்பிஐ வங்கியில் பணிபுரிந்து வந்த இளம்பெண் எரித்துக் கொல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

 

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றிய சினேகலதா என்ற 19 வயது இளம்பெண் நேற்று முன்தினம் மாயமான நிலையில் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ராஜேஷ் என்பவனை பிடித்து விசாரித்துள்ளனர்.

 

அவன் ஒரு கொத்தனார் என்பதும் இருவரும் காதலித்து வந்ததும் தெரியவந்துள்ளது. எஸ்பிஐ வங்கியில் வேலைக்குச் சேர்ந்த பிறகு சினேகலதா தன்னை ஒதுக்க தொடங்கியதாகவும் கல்லூரியில் உடன் படித்த பிரவீன் என்பவனோடு நெருங்கி பழக தொடங்கியதாகவும் ராஜேஷ் கூறியுள்ளார்.

 

இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் ராஜேஷ் ஸ்னேகலதாவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon