--- --:--:-- --

தமிழகத்தில் கொரொனா தடுப்பூசி போடப்படும் நபர்கள் பட்டியல் தயார்..!

6

மிழகத்தில் முதல் கட்டமாக கொரொனா தடுப்பூசி போடப்படும் நபர்கள் பட்டியல் தயாராக உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

 

சென்னையில் பேசியவர் 5 லட்சம் மருத்துவத் துறை பணியாளர்கள் மற்றும் உள்ளாட்சி, வருவாய், காவல்துறையை சேர்ந்தவர்கள், இணை நோயுள்ள மேட்டுக்குடி மக்கள் ஆகியோருக்கு முதற்கட்டமாக தடுப்பூசி போடப்படும் என தெரிவித்தார்.

 

தடுப்பூசி போட 21 ஆயிரம் பேருக்கு பயிற்சி தரப்பட்டு வருவதாக தெரிவித்த அவர் தடுப்பூசிகள் போட 46,000 மையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தடுப்பூசிகளை பாதுகாத்து வைக்கத் தேவையான குளிர்சாதனப்பெட்டி உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளும் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் கூறினார்.

 

தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் தந்தவுடன் அவற்றை போடும் பணி தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார். தமிழகத்தின் மூத்த குடிமக்களுக்கு கூடுதலாக தடுப்பூசிகளை ஒதுக்குவது குறித்து மத்திய அரசிடம் விவாதித்து வருவதாகவும் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon