திருவனந்தபுரத்தில் செய்தியாளர் கொலையா..! எழும் சந்தேகம்..!
பல முன்னணி மலையாள சேனல்களில் செய்தியாளராக பணியாற்றிய செய்தியாளர் திருவனந்தபுரத்தில் டெம்போ மோதி பலியான சம்பவம் கொலையாக இருக்கலாம் என பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
பிரதீப் என்ற செய்தியாளர் கேரளாவை ஆளும் கம்யூனிஸ்ட் அரசுக்கு எதிராக பல்வேறு ஊழல் மற்றும் முறைகேடுகள் புகார் தொடர்பாக அதிக அளவில் செய்திகளை வெளியிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கு பலமுறை கொலை மிரட்டல்கள் வந்துள்ளன.
இந்த நிலையில் நேற்று திருவனந்தபுரம் நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் நேமம் என்ற இடத்தில் பைக்கில் சென்று கொண்டிருந்த பிரதீப்பை பின்னால் வந்த டெம்போ மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் டெம்போ அவரைப் பின்தொடர்ந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே இது கொலையாக இருக்கலாம் என கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






