அரசு பள்ளி மாணவர்கள் ஐஐடி நுழைவுத் தேர்வில் பங்கேற்க திட்டம்..!
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் ஐஐடி நுழைவுத் தேர்வில் பங்கேற்கும் வகையில் தனியார் நிறுவனம் மூலம் பயிற்சி அளிக்கும் திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது.
டெல்லியை மையமாகக் கொண்டு செயல்படும் நெக்ஸ்ட்ஜன் வித்யா என்ற நிறுவனம் பயிற்சி வழங்குவதற்கான ஒப்பந்தம் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் இன்று கையெழுத்தானது.
பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்களுக்கான பதிவு டிசம்பர் 21ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் பயிற்சி வகுப்புகள் அடுத்த ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி தொடங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.






