--- --:--:-- --

கோவை : செட்டிநாடு குழும அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை !!!

1.1

ரி ஏய்ப்பு புகாரின் பேரில் 200க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் தமிழ்நாடு, ஹைதராபாத் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட மாநிலங்களில் செட்டிநாடு குழுமத்தின் பல்வேறு இடங்களில் உள்ள அலுவலகங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

 

அதன் ஒருபகுதியாக கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள செட்டிநாடு பிரைவேட் லிமிடெட் அலுவலகத்தில் காலை 8 மணி முதல் 15 வருமான வரித்துறை அதிகாரிகள் கொண்ட குழு சோதனை மேற்கொண்டு வருகிறது. அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் செல்போன்களை பறிமுதல் செய்து ஆவணங்களை பரிசோதித்து வருகின்றனர்.சோதனையில் பல்வேறு ஆவணங்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

வரி ஏய்ப்பு புகாரின் பேரில் செட்டிநாடு குழுமத்தின் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ள சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon