--- --:--:-- --

எந்தவித ட்ரோன்களும் பிரதமரை நெருங்க முடியாத வகையில் பாதுகாப்பு அமைப்பு..!

8

பிரதமர் மோடியின் பாதுகாப்பை அதிகரிக்கும் விதமாக ட்ரோன் எதிர்ப்பு அமைப்பை இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி அமைப்பான டிஆர்டிஓ உருவாகியுள்ளது. இந்த அமைப்பு பிரதமர் மோடியின் வீடு மற்றும் காரில் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த அமைப்பில் உள்ள ரேடார் வசதியின் மூலம் பிரதமர் மோடி இருக்கும் இடத்திலிருந்து 2 முதல் 3 கிலோ மீட்டர் வரை அவரை எந்த டிரோன்களும் நெருங்க முடியாது.

 

ஏதாவது டிரோன்கள் பிரதமரை நோக்கி வரும்போது இந்த அமைப்பு அவற்றின் தொலைத் தொடர்பை செயலிழக்க வைப்பதோடு உடனடியாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கும். இந்த டிரோன் எதிர்ப்பு அமைப்பு ஜம்மு காஷ்மீரில் எல்லைப்பகுதியில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon