--- --:--:-- --

பி‌ஐ‌எஸ் சான்று பெற்ற ஹெல்மெட் மட்டுமே தயாரித்து விற்க வேண்டும்..!

5

ந்திய தரக்கட்டுப்பாட்டு அமைப்பின் சான்று பெற்று தலைக் கவசங்கள் மட்டுமே தயாரித்து விற்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. சாலை விபத்துகளில் உயிரிழப்புகளை தடுப்பது குறித்து சாலை பாதுகாப்புக்கான குழு ஆராய்ந்து அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

 

இந்திய தரக்கட்டுப்பாட்டு அமைப்பின் சான்று பெற்ற எடை குறைந்த உறுதியான தலைக் கவசங்களை இருசக்கர வாகன ஓட்டுநர்களுக்காக தயாரித்து விற்க வேண்டும் என பரிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

அதை ஏற்றுக்கொண்ட சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் பி‌ஐ‌எஸ் பெற்ற தலைக் கவசங்களை மட்டுமே விற்க வேண்டும் என்பதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon