--- --:--:-- --

ஆந்திராவிலும் பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்துள்ளது..!

7

நிவர் புயல் காரணமாக ஆந்திராவிலும் பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. நெல்லூர், சித்தூர், கடப்பா, கிருஷ்ணா மற்றும் கிழக்கு கோதாவரி மாவட்டங்களில் கனமழை பெய்ததாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

 

அதேபோல ஆனந்தபுரமூர், கரூர், குண்டூர், மேற்கு கோதாவரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக 45 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய பலத்த காற்றால் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.

 

நெல்லூர், சித்தூர் மாவட்டங்களில் பயிர்கள் சேதம் அடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பிரசித்தி பெற்ற திருப்பதி, ஏழுமலையான் கோவிலில் மழை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் திருமலையில் இருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் தவித்தனர்.

 

கனமழையால் நெல்லூர் மாவட்டம் தான் அதிக பாதிப்பை சந்தித்துள்ளது. அங்கு 30 சென்டிமீட்டர் அளவுக்கு மழை கொட்டித் தீர்த்து உள்ளது.வேலூரில் உள்ள சுவர்ணமுகி ஆற்றில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்தது. வெள்ள பெருக்கால் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

சித்தூர் மாவட்டத்தில் பிக் மோட்டாரை நிறுத்துவதற்காக சென்ற மூன்று விவசாயிகள் நீர்தேக்கத்தில் இருந்து திறந்துவிடப்பட்ட நீரில் அடித்துச் செல்லப்பட்டன. அவர்களில் இருவரை தீயணைப்புத்துறையினர் பல மணி நேர போராட்டத்திற்கு பின் மற்றொருவரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon