--- --:--:-- --

கிண்டி பாம்பு பண்ணையில் மலை ஓணான்களை மிக அருகில் காணலாம்.!

7

சென்னை கிண்டி சிறுவர் பூங்காவில் உள்ள பாம்பு பண்ணை வளாகத்தில் இகுவானா எனப்படும் வெளிநாட்டு மலை ஓணான்கள் உள்ளது. கொரொனா ஊராடங்கிற்க்கு பிறகு சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக வெளிநாட்டு மலை ஓணான்களை மிக அருகிலிருந்து பார்த்து ரசிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

 

இது இந்தியாவிலேயே முதன் முறை என கிண்டி பாம்பு பண்ணை நிர்வாகம் கூறியுள்ளது. இதுவரையில் கண்ணாடி கூண்டிற்கு வெளியே நின்று ரசித்து வந்த நிலையில் இனி அந்தக் கூண்டு குள்ளேயே சென்று ரசிக்கலாம்.

 

இதனால் மிக மகிழ்ச்சி அடைந்துள்ள விலங்கு ஆர்வலர்கள் மற்றும் பல மாதங்களாக வீட்டில் அடைபட்டுக் கிடந்த பொதுமக்களும் குழந்தைகளோடு வந்து மக்களைக் கண்டு ரசித்து வருகின்றனர்.

 

ஆரஞ்சு, பச்சை மற்றும் நீலம் என மூன்று வெவ்வேறு நிறங்களில் காட்சியளிக்கும். இந்த விலங்குகளை தொட்டுப் பார்க்க அனுமதி இல்லை என்றாலும் மிக அருகில் சென்று ரசிக்கலாம் என்பதால் பொதுமக்கள் பலரும் அவற்றை கண்டு ரசித்து செல்பி எடுத்து மகிழ்கின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon