முக கவசம் அணிந்த கிறிஸ்துமஸ் தாத்தா சாக்லேட்..!
ஹங்கேரியில் முக கவசம் அணிந்த கிறிஸ்துமஸ் தாத்தா சாக்லேட்டுகள் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சாக்லேட் தயாரிப்பாளரான லஸ்லோ ரிமேக்ஸியின் வியாபாரம் கொரொனா ஊராடங்கால் பல மாதங்களாக பாதிக்கப்பட்டிருந்தது.
கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்க தயாரான அவர் கொரொனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தான் வழக்கமாக தயாரிக்கும் செண்டோ கிளாஸ் சாக்லேட்டுகளுக்கு பாதாம் கிரீமால் முக கவசம் அமைத்துள்ளார்.
ஆரம்பத்தில் சிலர் முகம் சுழித்தாலும் பின்னர் ஆர்டர்கள் குவிய தொடங்கியதால் தற்போது தினம் தோறும் 100 சாண்டா க்ளாஸ் சாக்லேட்டுகளை தயாரித்து வருகிறார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




