மாணவியின் செல்போனுக்கு ஆபாச படங்களை அனுப்பிய பள்ளி வேன் ஓட்டுநரின் உதவியாளர்..!
பள்ளி மாணவியின் செல்போனுக்கு ஆபாச படங்களை அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி வேன் ஓட்டுநரின் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் பகுதியில் பிரபல தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு அதே பள்ளியில் ஓட்டுனரின் உதவியாளராக பணிபுரிந்து வரும் சூசை என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். எட்டாம் வகுப்பு படித்து வரும் சிறுமிக்கு அவர் செல்போனில் ஆபாச படங்களை அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் செய்யூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரின் செல்போனை ஆய்வு செய்ததில் பள்ளி சிறுமிகள் பலருக்கு ஆபாச படங்களை அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.






