ஜம்மு-காஷ்மீரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்..!
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கி சூட்டில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜம்முவில் நக்ரோட்டா பகுதியில் பால்டோல்பிளாசா
அருகே உள்ள பாதுகாப்பு படை வீரர்கள் சோதனையிட்ட போது அந்த வழியாக டிரக்கில் வந்த வாகனத்தை மறைத்துள்ளனர்.
அப்போது அதில் இருந்த 4 பேர் பாதுகாப்பு படை வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து பதிலுக்கு பாதுகாப்பு படை வீரர்களும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
ஒரு காவலர் காயமடைந்துள்ளார். இந்த சம்பவத்தையடுத்து ஜம்மு ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.






