தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம் : 1714 பேருக்கு தொற்று பாதிப்பு..!18 பேர் உயிரிழப்பு!!
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1714 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் 2311பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். நேற்று போல் இன்றும் ஒரே நாளில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் உயிரிழப்பும் தொடர்ந்து கணிசமாக குறைந்து கொண்டே வருகிறது. இன்று 6 வது நாளாகவும் 2 ஆயிரத்திற்கும் கீழாக தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது.
இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் நேற்று 1652 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று சற்று அதிகரித்து 1714 ஆக பதிவாகியுள்ளது. இதனால் இதுவரையிலான மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்து 63 ஆயிரத்து 282 ஆக உயர்ந்துள்ளது. இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 2311 ஆகும் .இதன் மூலம் மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 7 லட்சத்து 37 ஆயிரத்து 281 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா பாதிப்பால் 14,440 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.
கொரோனா பாதிப்பால் தினசரி நிகழும் உயிரிழப்பும் தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்று போல் இன்றும் ஒரே நாளில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு 11,531 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 479 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், சென்னையில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 10 ஆயிரத்து 395 ஆக உயர்ந்துள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே தொற்று பாதிப்பு ஒன்று கூட பதிவாகாத நிலையில், தமிழகத்தில் ஒரு கொரோனா நோயாளி கூட இல்லாத முதல் மாவட்டம் என நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று புதிதாக 2 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





