நடிகை கவுதமியின் வீட்டுக்குள் சுவர் ஏறி குதித்த இளைஞர்..!
நடிகை கவுதமியின் வீட்டுக்குள் சுவர் ஏறி குதித்து நுழைந்த இளைஞரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை கொட்டிவாக்கம் வெங்கடேஸ்வரா நகரில் நடிகை கவுதமியின் வீடு உள்ளது. அந்த வீட்டு வளாகத்திற்குள் நேற்று இரவு திடீரென சுவரேறி குதித்து இளைஞர் ஒருவர் புகுந்துள்ளார். தகவலின் பேரில் நீலாங்கரை போலீசார் வந்து அவரை விரட்டி அடித்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில் இளைஞரின் பெயர் பாண்டியன் என்பதும் பெயிண்டராக வேலை பார்ப்பதும் குடிபோதையில் சுவர் ஏறி குதித்து வந்ததும் தெரியவந்துள்ளது.






