பெற்றோருக்கே தெரியாமல் 16 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம்..!
திண்டுக்கல் மாவட்டத்தில் குடும்ப வறுமையை காரணம் காட்டி வேலைக்கு சேர்த்து விடுவதாகக் கூறி பெற்றோருக்கே தெரியாமல் 16 வயது சிறுமிக்கு கட்டாயத் திருமணம் செய்துவைத்து தலைமறைவாக இருந்த பெரியப்பாவை போலீசார் போக்ஸோவில் கைது செய்தனர் .
சிறுமியை பெரியப்பா துளசி என்பவன் விராளிபட்டியை சேர்ந்த 40 வயது நபருக்கு பெற்றோருக்கு தெரியாமல் கட்டாயத் திருமணம் செய்து வைத்துள்ளான். சிறுமியை திருமணம் செய்த நபர் கடந்த மாதம் போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில் குண்டத்துப்பட்டியில் உள்ள தோட்டத்தில் பதுங்கி இருந்தபோது பெரியப்பாவும் சிக்கினார்.






