--- --:--:-- --

பள்ளிகள் திறப்பது குறித்து வரும் 12-ம் தேதிக்குள் முதலமைச்சர் அறிவிப்பார்..!

5

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து வரும் 12-ம் தேதிக்குள் முதலமைச்சர் அறிவிப்பு வெளியிடுவார் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

 

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் பள்ளிகள் திறப்பு குறித்து தமிழகத்தில் உள்ள 45 சதவீத பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு இருப்பதாக கூறினார். நேற்று பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது .

 

எனவே விரைவில் முதலமைச்சர் அதற்கான கருத்தின் அடிப்படையில் பள்ளி திறப்பது குறித்து முடிவு எடுப்பார் என கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon