--- --:--:-- --

லாரி உரசியதில் இரு சக்கர வாகனத்தில் இருந்து விழுந்து கணவன் கண் முன்னே மனைவி பலி..!

1

நெல்லையில் லாரி உரசியதில் இருசக்கர வாகனத்தில் இருந்து நிலை தடுமாறி தம்பதி கீழே விழுந்த நிலையில் பின் சக்கரம் ஏறி கணவன் கண்முன்னே மனைவி உயிரிழந்ததன் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி கேமரா காட்சி வெளியாகியுள்ளது.

 

கீழநத்தத்தை சேர்ந்த கோவில் பூசாரி பாலசுப்பிரமணியம் மற்றும் அவரது மனைவி சாந்தி இருசக்கர வாகனத்தில் நெல்லைக்கு சென்று கொண்டிருந்த போது ஸ்ரீபுரம் அருகே அரிசி லோடு ஏற்றிச் சென்ற லாரி அவர்களின் இரு சக்கர வாகனத்திற்கு பக்கவாட்டில் வந்துள்ளது.

 

அப்போது லாரி இருசக்கர வாகனத்தை உரசியதாலும், மழை காரணமாக சாலை ஈரமாக இருந்ததாலும் நிலை தடுமாறி தம்பதி இருவரும் கீழே விழுந்துள்ளனர். இதில் லாரியின் பின் சக்கரம் சாந்தியின் மீது ஏறி இறங்கியதில் உடல் நசுங்கி கணவர் கண் முன்னே உயிரிழந்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon