சிறையில் உயிரிழந்த கைதி..! மரணத்தில் மர்மம் இருப்பதாக மனைவி குற்றச்சாட்டு..!
திருட்டு வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டவர் விருத்தாச்சலம் கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிகழ்வில் அவரின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் நீதிபதியிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள சக்தி நகர் பகுதியைச் சேர்ந்த செல்வ முருகன் என்பவர் திருட்டு வழக்கு தொடர்பாக அண்மையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
விருத்தாசலம் கிளை சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு இரண்டாம் தேதி வலிப்பு ஏற்பட்டுள்ளது. விருதாச்சலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து பின்னர் சிறைக்கு சென்று திரும்பியுள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் செல்வ முருகனுக்கு மீண்டும் வலிப்பு ஏற்பட்டதாகவும், மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது பலனின்றி உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
பிணவறைக்கு சென்று உடலை பார்த்த அவரது மனைவி பிரேமா தனது கணவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார். காவல் துறையினர் அடித்ததால் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் இறந்ததாக இது குறித்து விசாரணை நடத்திய ஆனந்திடம் முறையிட்டுள்ளார்.






