--- --:--:-- --

சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை..!

11

சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இரவில் பரவலாக மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

 

கோயம்பேடு மதுரவாயல் கிண்டி ஆகிய பகுதிகளில் குன்னூரில் கனமழை பெய்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான சோமனூர், பின்னமங்கலம், பச்சகுப்பம், துத்திபட்டு, தேவலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் வரை தர்மபுரி மாவட்டம் அரூர் ஆகிய இடங்களிலும் பரவலாக மழை பெய்துள்ளது. பெரம்பலூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon