கர்நாடகாவில் தீபாவளியையொட்டி பட்டாசு வெடிக்க தடை..!
கர்நாடகாவில் தீபாவளியை ஒட்டி பட்டாசு வெடிக்க தடை விதிக்க முடிவு எடுத்துள்ளதாகவும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று அம்மாநில அமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். டெல்லியில் நாளை முதல் வரும் 30ம் தேதி வரை பட்டாசு வெடிக்க தடை விதித்து அம்மாநில சுகாதாரத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது என பல்வேறு பிரச்சனைகளில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க தடை விதித்துள்ளது. பிற பகுதிகளில் மக்கள் பட்டாசு வெடிக்க வேண்டாம் என மாநில அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
மேற்கு வங்கம், ராஜஸ்தான், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. பட்டாசு வெடிக்க தடை விதிக்கலாம் என்பது குறித்து பதிலளிக்க மத்திய அரசுக்கும் டெல்லி ஹரியானா உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநில அரசுகளுக்கும் பசுமை தீர்ப்பாயம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.






