திருமாவளவனை கண்டித்து நடக்கும் போராட்டத்தில் பங்கேற்க சென்ற குஷ்பூ கைது..!
திருமாவளவனை கண்டித்து பாஜக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க சென்ற குஷ்பு கைது செய்யப்பட்டுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை கண்டித்து பாஜக நடத்தும் போராட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
அதில் பங்கேற்க சென்ற குஷ்பு கைது செய்யப்பட்டுள்ளார். பாஜக மகளிரணி நடத்தும் போராட்டத்திற்கு காவல்துறை தடை விதித்து இருந்த நிலையில் குஷ்பு கைது செய்யப்பட்டுள்ளார்.
காரில் சிதம்பரம் நோக்கி சென்ற குஷ்புவை முட்டுக்காடு அருகே தடுத்து நிறுத்தி காவல்துறை கைது செய்தது. சமீபத்தில் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த குஷ்பு கைது செய்யப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.






