--- --:--:-- --

தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம் : 2522 பேருக்கு தொற்று பாதிப்பு… 27 பேர் உயிரிழப்பு

1

மிழகத்தில் இன்று 2522 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

தமிழகத்தில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக கீழிறங்கி வருகிறது. நான்காவது நாளாக இன்றும் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்திற்கு கீழாகவும், உயிரிழப்பும் மிக சொற்ப எண்ணிக்கையிலும் பதிவாகியுள்ளது. இன்றைய பாதிப்பு நிலவரம் தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

 

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2522 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்து14 ஆயிரத்து 235 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 27 பேர் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்த நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 10,983 ஆக உயர்ந்துள்ளது.

 

தமிழகத்தில் இன்று 4,029 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6,75,518 ஆக உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் தற்போது 27,734 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

சென்னையில் இன்றும் பாதிப்பு வெகுவாக குறைந்து, 695 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கி 1,97,077 ஆக அதிகரித்துள்ளது. சென்னையை அடுத்தபடியாக கோவையில் அதிகபட்சமாக 209 பேருக்கும், சேலத்தில் 146 பேருக்கும், செங்கல்பட்டு 144 , காஞ்சிபுரம் 98 , திருவள்ளூரில் 115 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon