--- --:--:-- --

அமைச்சர் துரைக்கண்ணு உடல் நிலை மிகவும் பின்னடைவு… 24 மணி நேர “கெடு” விதித்து காவேரி மருத்துவமனை அறிக்கை!!

14

தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு உடல் நிலையில் மிகவும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், அடுத்த 24 மணி நேரத்துக்கு சிகிச்சையை அவருடைய ஏற்றுக் கொள்வதை பொறுத்தே எதுவும் கூற முடியும் என கெடு வைத்து காவேரி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

 

வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு கடந்த 13-ந் தேதி திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு முதலில் விழுப்புரத்திலும் பின்னர் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பும் உறுதியான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

 

இந்நிலையில் நேற்று முதல் அவருடைய உடல் நிலை மோசமான நிலையில் எக்மோ கருவி மற்றும் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டாலும், அவருடைய உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக காவேரி மருத்துவமனை தரப்பில் நேற்று மாலை அறிக்கை வெளியானது. இதனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மருத்துவமனைக்கு சென்று துரைக்கண்ணுவின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

 

இந்நிலையில் அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் நிலையில் முன்னேற்றமின்றி தொடர்ந்து பின்னடைவாக இருப்பதாகவும், மருத்துவர்கள் அவரின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் காவேரி மருத்துவமனை தரப்பில் இன்றும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அமைச்சர்கள் சி.வி.சண்முகம், தங்கமணி, வேலுமணி, விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மருத்துவ மனைக்கு விரைந்தனர். தமாகா தலைவர் ஜி.கே.வாசனும் மருத்துவமனைக்கு சென்று அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

24 மணி நேர “கெடு” விதித்து காவேரி மருத்துவமனை

 

இந் நிலையில், அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை தரப்பில் இன்று மாலை 6.30 மணிக்கு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது, அதில் அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும், நுரையீரலில் 90% தொற்று பாதிப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு வழங்கப்படும் சிகிச்சையை அவருடைய உடல் ஏற்றுக் கொள்வதை பொறுத்தே முன்னேற்றம் குறித்து கூறமுடியும் என மருத்துவமனை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon