--- --:--:-- --

சமூக நீதி ஆணையம் அமைக்க அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் – அமைச்சர் நிர்மல்குமார்

7

முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டம் நிறைவடைந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் நிர்மல்குமார், அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து விளக்கினார். அமைச்சரவைக் கூட்டம் முடிந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் நிர்மல்குமார் கூறியதாவது: “எட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்க அமைச்சரவையில் அனுமதி அளிக்கப்பட்டது. சமூக நீதி சர்வே தொடர்பாக ஆணையம் உருவாக்க அமைச்சரவையில் அனுமதி அளிக்கப்பட்டது.

 

தாளம்பூரில் உள்ள 600 ஏக்கர் நிலம் தொடர்பாக ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பாக அமைச்சர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மதம் மாறிய முஸ்லிம் வழக்குகள் தொடர்பான சீராய்வு மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.முதலமைச்சர், மாவட்ட அமைச்சர்கள் அவர்களது பகுதியில் செயல்படுத்தப்படும் திட்டங்களை ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் மக்களின் குறைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்றும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்” எனத் தெரிவித்தார்.

 

தொடர்ந்து முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, “யாரும் யாரையும் பழிவாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. புகாரின் அடிப்படையில் தான் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றன. தவறு செய்ததற்கான ஆதாரங்கள் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். யார் தவறு செய்திருந்தாலும் பாகுபாடின்றி நடவடிக்கை எடுக்கப்படும்.

 

 

File-ஐ திறங்க என்று சொல்கிறார்கள். File-ஐ திறந்ததும் Stay வாங்கிவிடுகிறார்கள். சிறுமியை கண்டுபிடிப்பதற்கான அனைத்து தேவையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிறையில் சிசிடிவி பொருத்த அனுமதி பெறப்பட்டுள்ளது. ஆன்லைன் வாயிலாகப் பதிவு செய்து, விசிட்டர்ஸ் வந்து பார்த்து செல்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” இவ்வாறு தெரிவித்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon