அரசு உத்தரவை காற்றில் பறக்க விட்ட காட்டியனேந்தல் அரசுப்பள்ளி…!
திருவாடானை தாலுகா காட்டியனேந்தல் கிராமத்தில் ஊராட்சிய ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், இன்று விஜயதசமியை முன்னிட்டு மாணவர் சேர்க்கை இருக்கும் என்பதால் பள்ளிகள் அனைத்தும் திறந்திருக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.ஆனால் இந்த உத்தரவை காற்றில் பறக்கவிட்டு பள்ளி திறக்கப்படாமல் உள்ளது.

காட்டியனேந்தல் ஊராட்சி ஒன்றிய த தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் யாரும் வராமல் பள்ளி மூடப்பட்டு இருந்தது. இது பற்றி வட்டார கல்வி அலுவலரிடம் (+919159953529) தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் போன் இணைப்பை எடுக்கவில்லை மீண்டும் இணைப்பில் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மாவட்ட, வட்டார அளவிலான அதிகாரிகளும் பெயரளவிற்கு சாலையோரம் உள்ள பள்ளிகளை மட்டும் பார்வையிட்டு படம் பிடித்துக்கொண்டு சென்று விடுகின்றனர். இது போன்ற கிராமங்களில் இருக்கும் பள்ளிகளை கண்டுகொள்வதில்லை. இதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.






