தவறான சிகிச்சை அளித்ததால் இளம் பெண் உயிரிழந்ததாக கூறி மருத்துவமனை மீது கல்வீசி தாக்குதல்..!
புதுச்சேரியில் தவறான சிகிச்சை அளித்ததால் இளம் பெண் உயிரிழந்ததாக கூறி தனியார் மருத்துவமனை மீது கல்வீசி தாக்குதல் நடத்திய உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
தொட்டிபாளையம் பகுதியை சேர்ந்த அய்யப்பன் என்பவரின் 20 வயது மனைவி விஜயலட்சுமி வயிற்றிலிருந்து மூன்று மாத சிசு தனியார் கருத்தரிப்பு மையத்தில் ஆப்ரேஷன் மையத்தில் அகற்றப்பட்டது.
வீடு திரும்பிய விஜயலட்சுமிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மீண்டும் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விஜயலட்சுமி தங்களிடம் அழைத்து வரப்பட்ட போது மிகவும் ஆபத்தான நிலையில் இருந்ததாக தனியார் மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.






