ஓசூரில் சாலையோரமாக கிடைத்த தங்க நாணயங்கள்..!
ஓசூர் அருகே சாலையோரமாக தங்க நாணயங்கள் கிடைப்பதாக வெளியான தகவலையடுத்து பொது மக்கள் அங்கு குவிந்தனர். குடியிருப்புகளில் சிலருக்கு சிறிய வடிவிலான தங்க நாணயங்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல் பரவியதையடுத்து அந்த பகுதிக்கு பொது மக்கள் படை எடுத்தனர்.
அதில் ஒரு சிலருக்கு அந்த நாணயங்கள் கிடைத்தது. இது உலோகமா? நாணயமா? என்று என்று உறுதியான தகவல் கிடைக்கவில்லை.






