--- --:--:-- --

தமிழகத்தில் இன்று 5688 பேருக்கு கொரோனா பாதிப்பு… 66 பேர் உயிரிழப்பு… சென்னை, கோவையில் குறைந்தபாடில்லை!!

asd

மிழகத்தில் இன்று ஒரே நாளில் 5688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழப்பும் 66 ஆக பதிவான நிலையில், சென்னை, கோவையில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்தபாடில்லை.

 

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லாமல் கடந்த இரு மாதங்களாக ஒரே சீராக பதிவாகி வருகிறது. இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

 

தொடர்ந்து உயர்ந்து தமிழகத்தில் இன்று புதிதாக 5688 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 3 ஆயிரத்து 290 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று 66 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த நிலையில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9586 ஆக அதிகரித்துள்ளது.

 

தமிழகத்தில் இன்று 5,516 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 47 ஆயிரத்து 335 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 46,369 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,289 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் இன்றும் அதிகபட்சமாக 550 பேருக்கும், செங்கல்பட்டில் 356, சேலம் 341, தஞ்சாவூர் 232 என மாவட்டங்களில் அதிகபட்சமாக பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon