ஏடிஎம் இயந்திரம் திறந்து கிடந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி..!
சென்னை நுங்கம்பாக்கத்தில் தனியார் வங்கி ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்கும் இயந்திரம் திறந்து கிடந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சாஸ்திரி பவன் அருகே உள்ள யூனியன் வங்கி ஏடிஎம் இயந்திரம் திறந்து கிடந்ததை பார்த்து பணம் திருடப்பட்டிருக்கலாம் என போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
விசாரணையில் வங்கி ஊழியர்கள் மென் பொருள் பதிவேட்டிற்காக பணம் எடுக்கப் பட்ட நிலையில் இயந்திரத்தை மூட முடியாததால் அப்படியே விட்டு விட்டதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






