59 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது..!
ஜப்பானில் 59 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. ஏராளமான காமிக்ஸ் மற்றும் திரைப்படங்களில் வலம் வரும் கற்பனை கதாபாத்திரமான குண்டமின் நாற்பதாவது திருநாளை முன்னிட்டு அதைப் போலவே ஒரு ராட்சத ரோபோவை தொழில்நுட்ப கலைஞர்கள் வடிவமைத்தனர்.
25 டன் எடையிலான இந்த ரோபோ சோதனையின் போது கைகள் மற்றும் கால்களை அசைத்து முழங்காலில் மண்டியிட்டு அசத்தியது டிசம்பர் மாதம் புதிதாக திறக்கப்படும் பொழுதுபோக்கு பூங்காவில் இந்த ரோபோ பார்வையாளர்களை வரவேற்க உள்ளது.






