அரியலூரில் திருட முயன்றவனுக்கு பொதுமக்கள் கொடுத்த தர்ம அடி..!
அரியலூர் அருகே பட்டப்பகலில் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து திருட முயன்ற போது பிடிபட்ட இளைஞரை கம்பத்தில் கட்டி வைத்து பொதுமக்கள் தர்மஅடி கொடுத்தனர். இந்த சம்பவம் வெங்கட்ரமணாபுரம் என்ற கிராமத்தில் நிகழ்ந்தது.
விவசாயி அன்பழகன் என்பவரது வீட்டு கதவை கடப்பாறையால் உடைக்க முயன்றபோது இளைஞர் சிவகங்கையை சேர்ந்த செந்தில் மாறன் என தெரியவந்தது. அரியலூர் மாவட்டத்தில் நகைக்கடை மற்றும் வீடுகளில் நடந்த கொள்ளைக்கும் பிடிபட்ட இளைஞருக்கும் தொடர்பு உள்ளதா என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






