--- --:--:-- --

குளிக்க சென்றவரை கடித்து இழுத்து சென்ற முதலை…!

12

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் ஆற்றில் முதலை கடித்து இழுத்து சென்ற விவசாயியை மீட்டுத்தரக் கோரி பொதுமக்கள் கொட்டும் மழையிலும் சாலை மறியல் செய்தனர். பழைய நல்லூரை சேர்ந்த விவசாயி அறிவானந்தம் இரவு அங்குள்ள பழையகொள்ளிடம் ஆற்றில் குளிக்கும் போது அவரை முதலை கடித்து இழுத்து சென்றதாக கூறப்படுகிறது.

 

தகவலின் பேரில் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் தேடி வந்தபோது மழையால் பணியில் தொய்வு ஏற்படவே சிதம்பரம் சீர்காழி சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon