மதுரை அரசு மருத்துவமனையில் போதிய கழிப்பறை வசதியில்லை..!
மதுரை அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் போதிய கழிவறை வசதி இல்லை என புகார் எழுந்துள்ளது. அரசு ராஜாஜி மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் இரண்டு கழிப்பறைகள் மட்டுமே உள்ளதாகவும் அதுவும் சுகாதாரமற்ற முறையில் இருப்பதால் நோயாளிகள் அவதிப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
இதுகுறித்து மருத்துவமனை நிறுவனர் சங்குமணியிடம் கேட்டபோது இதுவரை புகார்கள் எதுவும் வரவில்லை எனவும் இருப்பினும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.






