--- --:--:-- --

வாட்ஸ்அப், பேஸ்புக், மெசஞ்சர் போன்ற செயலிகளுக்கு கட்டுப்பாடுகள் கூடாது..!

4

வாட்ஸ்அப், பேஸ்புக், மெசஞ்சர் போன்ற தகவல் தொடர்பு செயலிகளுக்கு கட்டுப்பாடுகள் கூடாது என தொலைதொடர்பு கட்டுப்பாட்டு அமைப்பான டிராய் தெரிவித்துள்ளது. ஓ‌டி‌டி தளங்களுக்கு கட்டுப்பாடு இல்லாத காரணத்தால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் உள்ளதாக ஆபரேட்டர்கள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

 

இது தொடர்பாக பதிலளித்துள்ள ட்ராய் அமைப்பு குறிப்பிட்ட செயலிகளுக்கு ஒப்புதலைப் அளிப்பதற்கு முன்னதாக பரிசோதிக்கலாம், கண்காணிக்கலாம் எனவும் அனுமதி அளித்த பிறகு அதன் செயல்பாடுகளில் தலையிடக் கூடாது எனவும் தெரிவித்துள்ளது.

 

மேலும் கண்காணிப்பை கட்டாயமாக்குதல், தகவல் தொடர்பு பயன்பாடுகளின் பாதுகாப்பு கட்டமைப்பை பலவீனப்படுத்தும் அல்லது சட்டவிரோத செயல்களுக்கு வழிவகுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon