--- --:--:-- --

காவலர்களுக்கு அவரவர்களின் பிறந்த நாளுக்கு விடுமுறை வழங்கப்படுகிறது..!

3

சென்னை காவல் துறையில் பணியாற்றி வரும் போலீசாருக்கு பிறந்தநாள் அன்று விடுமுறை வழங்க காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். தற்போது காவலர்கள் தொடங்கி அதிகாரிகள் வரை அனைத்து போலீசாருக்கும் அவரவர் பிறந்த நாளில் தான் கையெழுத்திட்ட வாழ்த்து அட்டையை வழங்கி காவல் ஆணையர் உற்சாகப்படுத்தி வருகிறார்.

 

இந்த நிலையில் சென்னை காவல் துறையில் பணியாற்றும் போலீசாருக்கு அவர்களது பிறந்த நாள் அன்று விடுமுறை வழங்க மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.

 

பிறந்த நாளுக்கு முன்தினம் சம்பந்தப்பட்டவர்களுக்கு காவல் நிலையத்தில் உள்ள பிற போலீசார் வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என்று தனது உத்தரவில் சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்திருக்கிறார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon