--- --:--:-- --

கோவை அருகே குடும்பத்தகராறு காரணமாக கிணற்றில் குதித்த காதல் மனைவி! காப்பாற்ற குதித்த கணவன்! மீட்ட தீயணைப்புத்துறை !!!

14

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே காதல் திருமணம் செய்த கணவன்,மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக அருகில் இருந்த கிணற்றில் மனைவி திடீரென குதித்துள்ளார். மனைவியை காப்பாற்ற கணவனும் கிணற்றில் குதித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கோவை பெரியநாயக்கன்பாளையம் செல்வபுரத்தை அடுத்துள்ள அம்சி நகரைச் சேர்ந்தவர் ஆதிகணேஷ். டிராக்டர் டிரைவராக வேலை செய்து வரும் இவர் அதே பகுதியைச் சேர்ந்த நந்தினி என்பவரை காதலித்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

 

ஆதி கணேஷ் மது அருந்தும் பழக்கம் உள்ளதால் தினமும் மது அருந்திவிட்டு வந்து மனைவி நந்தினியுடன் சண்டையிடுவது வழக்கம் என தெரிகிறது. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் இரவில் மது அருந்திவிட்டு வந்த ஆதி கணேஷ் மனைவி நந்தினியுடன் சண்டைப் போட்டுள்ளர்.ஒரு கட்டத்தில் கோபமடைந்த நந்தினி தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறி அருகில் இருந்த சுமார் 60 அடி ஆழமுள்ள பயன்படுத்தப்படாத கிணற்றில் திடீரென குதித்துவிட்டார்.

இதனால் அதிர்ச்சியடைந்த கணவர் ஆதி கணேஷ் மனைவியை காப்பாற்ற அதே கிணற்றில் குதித்துள்ளார்.சத்தம் கேட்டு வந்த பக்கத்து வீட்டார் உடனடியாக பெரியநாயக்கன்பாளையம் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் கயிறு மூலம் கிணற்றில் இறங்கி அங்கு காயத்துடன் இருந்த ஆதிகணேஷ் மற்றும் நந்தினி ஆகியோரை 4 மணி நேர போரட்டத்திற்கு பிறகு கயிறு கட்டி கிணற்றிலிருந்து வெளியே மீட்டனர்.

 

தொடர்ந்து அதிகாலை 3.30 மணியளவில் மீட்கப்பட்ட கணவன், மனைவி இருவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.காதல் திருமணம் செய்த கணவன், மனைவி இருவரும் கிணற்றில் குதித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon