--- --:--:-- --

வரும் 7-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் ரயில், பேருந்து சேவை..! முதல்வர் எடப்பாடி அதிரடி அறிவிப்பு!! கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை மக்களே மேற்கொள்ள அறிவுரை!!

images (1)

தமிழகத்திற்குள் வரும் 7-ம் தேதி முதல் ரயில் மற்றும் பேருந்துகள் சேவைக்கு அனுமதி அளித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கொரோனா பரவலை தடுக்க மக்கள் பாதுகாப்புடன் பயணிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

 

தமிழகத்தில் ஊரடங்கில் அடுத்தடுத்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. நேற்று முதல் மாவட்டத்திற்குள் மட்டும் பேருந்துகள் இயக்க அனுமதிக்கப்பட்டது. கோயில்கள் உள்ளிட்ட மத வழிபாட்டு தலங்கள், அனைத்து வணிக வளாகங்கள் உள்ளிட்டவற்றிற்கும் அனுமதி வழங்கப்பட்டது. தமிழகத்திற்குள் பயணிக்க இ – பாஸ் தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டது.

 

இந்நிலையில் யாரும் எதிர்பாராத அதிரடி அறிவிப்பை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ளார். வரும் 7-ம் தேதி முதல் தமிழகத்திற்குள் அனைத்து ரயில்களும் இயக்கப்படும். மாவட்டங்கள் இடையேயும் அரசு, தனியார் பேருந்துகள் இயக்கப்படும் என்ற அறிவிப்பை முதல்வர் எடப்பாடி அதிரடியாக அறிவித்துள்ளார். கொரோனா தொற்று உச்சத்தில் இருக்கும் இந்த சமயத்தில் திடீரென பேருந்து, ரயில் சேவைகளுக்கு அனுமதி அளித்துள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ள நிலையில், பல்வேறு தரப்பிலும் வரவேற்பும் கிடைத்துள்ளது.

இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா தொற்று பரவலை தடுக்க மக்கள் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். முகக் கவசம், சமூக இடைவெளி போன்ற அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்ற அறிவுரைகளையும் வேண்டுகோளாக முன்வைத்துள்ளதும் குறிப்பிபத்தக்கது .

 

ஆக மொத்தத்தில், ஊரடங்கில் இருந்து மொத்த தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில் கொரோனாவில் இருந்து மக்கள் தான் இனி பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon