--- --:--:-- --

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் கோமா நிலைக்கு சென்றுவிட்டாரா..?

7

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் கோமாவில் இருப்பதாகவும் அவரது சகோதரி கிம் யோங் ஜாங்கிடம் அனைத்து பொறுப்புகளும் ஒப்படைக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் உடல்நிலை குறித்தும் அவருக்கு அடுத்த ஆட்சிக் கட்டிலில் அமர போவது யார் என்பது குறித்தும் அடிக்கடி புதுப்புது தகவல்கள் பரவிய வண்ணம் உள்ளது. அந்த வகையில் தென் கொரியாவின் முன்னாள் அதிபர் கிம் தே ஜாங்கின் உதவியாளராக இருந்த சாங்க்ஸங் அதிர்ச்சியான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

வடகொரிய அதிபர் கோமா நிலையில் இருக்கிறார். அவரது வாழ்வு இன்னும் முடியவில்லை. அனைத்து அரசு பொறுப்புகளும் சகோதரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதுதான் அவர் வெளியிட்ட பதிவு. சர்வதேச அளவில் இதுவே விவாதப் பொருளாக மாறியுள்ளது.

 

கடந்த வாரத்தில் கிம் யோங் ஜாங்கிற்கு வெளிநாட்டு விவகாரங்களை கவனிக்கும் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகின. பணிச்சுமையில் இருக்கும் கிம் ஜாங்க உன் தனது பொறுப்புகளை சகோதரியிடம் ஒப்படைத்துள்ளார் என கூறப்பட்டது.

 

பொதுவாக வட கொரிய தலைவர்கள் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் தான் அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பார்கள் என சொல்லப்படுவது உண்டு. இந்நிலையில்தான் சாம்சங்கின் வெளியிட்டுள்ள தகவல் கவனம் பெற்றுள்ளது.

 

கிங் தொடர்பாக அண்மையில் அந்நாட்டு அரசு வெளியிட்ட புகைப்படங்களும் வீடியோக்களும் போலியானவை என்றும் சொல்லப்படுகிறது. கிம்மை விட நான்கு வயது இளையவரான கிம் யோங் ஜாங் சுவிட்சர்லாந்தில் கல்வி பயின்றார். கிம்முக்கு அடுத்து சக்தி வாய்ந்தவராக கருதப்படுகிறார்.

 

நாட்டில் அதிகாரம் படைத்த அமைப்பான வடக்கொரிய தொழிலாளர் கட்சியின் மத்திய குழு உறுப்பினராகவும், அரசியல் தலைவராகவும் உள்ளார். கிம், டிரம்ப் சந்திப்புகளின் போது உடனிருந்து சர்வதேச கவனம் பெற்றவர். 2018 ஆம் ஆண்டு தென் கொரியாவுக்கு பயணம் மேற்கொண்டார்.

 

தென்கொரியா மற்றும் அமெரிக்கா தொடர்பான உறவுகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கும் பொறுப்பு அவரிடமே இருப்பதாக தெரிகிறது. தற்போது வெளியான தகவல் படி கிம் யோங் ஜாங் நாட்டை ஆளும் பொறுப்பை பெற்றார் என்றால் வட கொரியாவின் அடுத்து சர்வாதிகாரி இவர்தான். ஆனால் வட கொரியாவை பொருத்தவரை எதுவுமே நிச்சயம் இல்லை என்பதே உண்மை.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon