--- --:--:-- --

குட்காவை பேரவைக்குள் எடுத்து சென்ற வழக்கில் உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு..!

8

சட்டப்பேரவைக்கு குட்கா கொண்டு சென்றதற்காக உரிமைக்குழு அனுப்பிய நோட்டீசுக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்குகளில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

 

சட்டப்பேரவை நிகழ்வு ஒன்றில் ஸ்டாலின் உட்பட 21 எம்எல்ஏக்கள் குட்கா பாக்கெட்டுகளை பேரவைக்குள் எடுத்து சென்றனர். அரசு தடை செய்த குட்கா பொருட்கள் காவல் துறையின் உதவியோடு கடைகளில் விற்பனை செய்யப்படுவதாகவும் அதனை அரசின் கவனத்திற்குக் கொண்டு வரவே குட்கா பாக்கெட்டுகளை கொண்டு சென்றதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.

 

இதுதொடர்பாக நடவடிக்கை மேற்கொண்ட உரிமை குழு மு க ஸ்டாலின் உள்ளிட்ட 21 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதனை எதிர்த்து கடந்த 2017 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

 

அதனை விசாரித்த நீதிபதி எம் துரைசாமி உரிமைக் குழுவின் நோட்டீஸ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என இடைக்காலத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார். பின்னர் தலைமை நீதிபதி ஏ‌பி சாகி, நீதிபதி செந்தில் குமரேசன் அமர்வில் விசாரிக்கப்பட்டது.

 

அனைத்து தரப்பு வாதங்களும் ஆகஸ்ட் 14ஆம் தேதி தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் தலைமை நீதிபதி அமர்வு இன்று தீர்ப்பளித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon