இன்னும் 6 மாதங்களில் மொபைல் போன் சேவை கட்டணங்கள் உயரும்..!
மொபைல் போன் சேவை கட்டணங்கள் அடுத்த 6 மாதங்களில் உயர வாய்ப்பு இருப்பதாக ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் தெரிவித்துள்ளார். டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் இந்தியாவில் 16 ஜிபி டேட்டாவுக்கு 160 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படுகிறது என்றும் இது இந்த துறையின் மோசமான நிலையை காட்டுகிறது என்றும் குறிப்பிட்டார்.
இதனால் கட்டண உயர்வு அவசியமாகிறது என்றும் இதன் மூலம் ஒருவர் மாதத்திற்கு சராசரியாக 200 ரூபாய் செலுத்தும் நிலை உருவாகும் என்று தெரிவித்தார். ஆனால் உண்மையில் மாதம் சராசரியாக ஒருவரிடம் இருந்து 300 ரூபாய் வசூலானால் மட்டுமே தொலைதொடர்பு நிறுவனங்களின் பொருளாதார ஆர்வம் மேம்படும் என அவர் தெரிவித்தார்.






