--- --:--:-- --

பாடகர் எஸ்‌பி‌பி உடலில் முன்னேற்றம் இல்லை..! தொடர்ந்து கவலைக்கிடம்..!

3.1

பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியன் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. கொரொனாவால் பாதிக்கப்பட்ட கடந்த ஐந்தாம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாடகர் எஸ் பி பி யின் உடல் நிலையில் திடீரென பின்னடைவு ஏற்பட்டது.

 

இதை தொடர்ந்து எக்மோ மற்றும் உயிர் காக்கும் கருவிகளுடன் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் எஸ்பிபியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.

 

வெளி நாட்டு மருத்துவர்கள் உடன் கலந்து ஆலோசித்து மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனது தந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை என்றாலும் ரசிகர்களின் வேண்டுதல் அவரை மீட்க்கும் என எஸ் பி பி யின் மகன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon