--- --:--:-- --

மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் ஆர்.நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதி…! சாதாரண காய்ச்சல் என தகவல்!!

2.1

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு சென்னை அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு சாதாரண காய்ச்சல் தான் என்றும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் அக்கட்சியின் மற்றொரு தலைவரான சி.மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான 95 வயதான ஆர்.நல்லகண்ணு, தனது எளிமை, நேர்மையால் தமிழகத்தின் அனைத்து தரப்பினராலும் மதிக்கப்படும் தலைவராவார். 95 வயதிலும் பொது வாழ்க்கையில், பொதுப் பிரச்னைகளுக்காக இன்னமும் போராட்டக் களத்தில் நிற்பவர் ஆர்.நல்லகண்ணு. கொரோனா வைரஸ் தொற்று பலரையும் அச்சத்தில் ஆழ்த்தி வரும் நிலையில், ஆர்.நல்லகண்ணு நேற்றிரவு சென்னை அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட தகவல் பலரையும் கவலையடைச் செய்தது.

 

ஆனால், நல்லகண்ணுவுக்கு சாதாரண காய்ச்சல் அறிகுறிகள் ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே அவரது உடல்நிலை குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சி.மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon