கடன் தொல்லை காரணமாக அரளி விதையை அரைத்து குடித்த குடும்பம்..! தாய், தந்தை பலி..!
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் கடன் தொல்லை காரணமாக அரளி விதையை அரைத்துக் குடித்து தாயும், தந்தையும் உயிரிழந்தனர். அதேநேரத்தில் குழந்தைகள் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விசைத்தறி தொழில் செய்துவரும் சுப்பிரமணியம் – மேனகா தம்பதியினர் அப்பகுதியை சேர்ந்த அய்யாசாமி என்பவரிடம் கடன் பெற்றுள்ளார். கடனைத் திருப்பித் தரக் கோரி அய்யாசாமி தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த மேனகா கணவர் மற்றும் மகன், மகளுக்கு அரளி விதையை அரைத்து பாலில் கலந்து கொடுத்துள்ளார். இதில் சுப்பிரமணியம், மேனகா ஆகியோர் உயிரிழந்த நிலையில் அவர்களின் இரு பிள்ளைகளும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடன் தொல்லையால் உயிரிழந்ததாக அவர்கள் எழுதிய கடிதத்தை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.






