சிவகங்கை மாவட்டத்தில் 74வது சுதந்திர தினவிழா..! மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெ.ஜெயக்காந்தன் கொடியேற்றி மரியாதை..!
சிவகங்கை மாவட்டத்தில் 74வது சுதந்திர தினவிழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெ.ஜெயக்காந்தன் அவர்கள் கலந்துகொண்டு கொடியேற்றி மரியாதை செய்தார். பின்பு சமாதான புறாக்கள் மற்றும் வண்ண பலூன்களை பறக்கவிட்டு காவல்துறை மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

மருத்துவத்துறை, சுகாதாரத்துறை, வேளாண்மை துறை வருவாய்த்துறை, தூய்மை பணியாளர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் சுமார் ஒரு கோடி மதிப்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்வில் மாவட்ட காவல்துறை Sp ரோஜித்நாதன் ips, மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு.ரத்தினவேல், தாசில்தார் மயிலாவதி உள்ளிட்டோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.






