பாழடைந்த கிணற்றுக்குள் பைக்குடன் விழுந்த 2 பள்ளி மாணவர்கள்…!
திருவள்ளூர் மாவட்டம் ஆர்கே பேட்டை அருகே பாழடைந்த கிணற்றுக்குள் இருசக்கர வாகனம் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 2 பள்ளி மாணவர்கள் உயிர் இழந்தனர். எகினாபுரத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள் ஆன சந்தோஷ், சத்யா மற்றும் விஜயகுமார் ஆகியோர் விடுமுறை காரணமாக சிறு கூலி வேலை செய்து வந்தனர்.
வேலை முடிந்து இரு சக்கர வாகனத்தில் மூவரும் வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது கட்டுப்பாட்டை இழந்த வாகனம் கடன் சாலையோரத்தில் இருந்து 80 அடி ஆழம் கொண்ட தண்ணீரற்ற கிணற்றுக்குள் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் படுகாயமடைந்த சத்யா, சந்தோஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.






