--- --:--:-- --

ரஷ்யாவில் இறந்த தமிழக மாணவர்களின் உடல்களை மீட்க நடவடிக்கை..!

9.1

ரஷ்யாவில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த தமிழக மாணவர்கள் நான்கு பேரின் உடல்களை சொந்த ஊர்களுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

 

ரஷ்யாவின் வால்குகிராட்ஸ் மருத்துவமனையில் பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த தமிழகத்தை சேர்ந்த ஆஷிக், விக்னேஷ், மனோஜ் மற்றும் ஸ்டீபன் ஆகியோர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஆற்றில் குளித்தபோது சுழலில் சிக்கி உயிரிழந்தனர்.

 

இதனையறிந்து மிகுந்த மனவேதனை அடைந்ததாக அறிக்கை ஒன்றில் தெரிவித்திருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களது குடும்பத்தினருக்கு இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்து உள்ளார்.

 

உயிரிழந்த மாணவர்களின் உடல்கள் சொந்த ஊருக்கு கொண்டு வர வெளியுறவு அமைச்சகம் மற்றும் ரஷ்யாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருப்பதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

 

ரஷ்யாவில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த தமிழக மாணவர்கள் உடலை விரைந்து மீட்டுவர வெளியுறவுத்துறை அமைச்சர்கள் தமிழக பாஜக தலைவர் வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அனுதாபங்களை தெரிவித்து உள்ளார்.

 

உடலை விரைவில் தமிழகத்திற்கு கொண்டு வர வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை தொடர்பு கொண்டு பேசியதாகவும் கோரிக்கையில் கடிதமாக அனுப்பி இருப்பதாகவும் வேல்முருகன் குறிப்பிட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon