தனது நாயை கண்டுபிடித்து தருவோருக்கு 10 ஆயிரம் என ஒட்டப்பட்ட போஸ்டர்..!
சென்னையில் காணாமல் போன தனது செல்லப்பிராணியை கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் பரிசாக தருவதாக உரிமையாளர் விளம்பரம் செய்துள்ளார்.
தியாகராய நகரை சேர்ந்த சாகர்கனகபள்ளி கடந்த மாதம் 24ம் தேதி சௌந்தரராஜன் தெருவில் உள்ள மருத்துவமனைக்கு செல்லும் போது உடன் அழைத்துச் சென்ற செல்லப்பிராணி நாய் லில்லி காணாமல் போனதாக போலீசில் புகார் அளித்துள்ளார்.
ஆறு மாதத்திற்கு முன்பு வாங்கிய மாங்ரல் வகையை சிறந்த தனது நாய் லில்லியை கண்டு பிடித்து தருவோருக்கு 10 ஆயிரம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று விளம்பரம் செய்துள்ளதுடன் சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து தேடி வருகிறார்.






