--- --:--:-- --

அதிமுகவில் எம்‌எல்‌ஏவாக இருந்த காலத்தில் பெற்ற சம்பளத்தை எஸ்‌வி.சேகர் திருப்பி செலுத்த தயாரா?

10

அதிமுக எம்எல்ஏ வாக இருந்த காலத்தில் ஐந்து ஆண்டு காலம் பெற்ற சம்பளத்தை எஸ் வி சேகர் அரசு கருவூலத்தில் திரும்பச் செலுத்த தயாரா என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

மத்திய அரசின் புதியகல்விக் கொள்கையில் குறிப்பிட்டுள்ள மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த திட்டம் இல்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் தெரிவித்திருந்தார். இதை விமர்சித்து எஸ் வி சேகர் அதிமுக உருப்பட வேண்டுமானால் கட்சி கொடியில் இருந்து அம்மா படத்தை நீக்க வேண்டும் என கூறியதாகச் சொல்லப்படுகிறது.

 

இதுகுறித்து சென்னை காசி மேட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயகுமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் மயிலாப்பூர் தொகுதியில் அதிமுக கொடியையும், கொடியில் உள்ள அண்ணாவின் படத்தையும் காட்டித்தான் எஸ் வி சேகர் வெற்றிப் பெற்றதாக தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon